அமெரிக்கா: கால்பந்து போட்டியின்போது 16 வயது மாணவி திடீரென சரிந்து, மரணம்


அமெரிக்கா: கால்பந்து போட்டியின்போது 16 வயது மாணவி திடீரென சரிந்து, மரணம்
x

அமெரிக்காவில் பள்ளி அளவிலான கால்பந்து போட்டியின்போது 16 வயது மாணவி திடீரென சரிந்து, விழுந்து மரணம் அடைந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.



லாஸ் வேகாஸ்,


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் டெசர்ட் ஓசிஸ் உயர்நிலை பள்ளியில் படித்து வந்த மாணவி சோபோமோரே ஆஷாரி ஹியூஜஸ் (வயது 16). இவர் படித்த பள்ளியிலேயே, இவரது பள்ளிக்கும், வேலி உயர்நிலை பள்ளிக்கும் இடையே கால்பந்து போட்டி நடந்துள்ளது.

இதில் சோபோமோரே கலந்து கொண்டார். பள்ளி அளவில் நடந்த இந்த கால்பந்து போட்டியின்போது அவர் திடீரென சரிந்து, விழுந்து உள்ளார். அவரது அணியில் விளையாடிய மற்றொரு சிறுமியின் தாயாரான ஆபீலியா பைபர்-ஹில் என்ற நர்ஸ் உதவிக்கு ஓடி வந்துள்ளார்.

அந்த கடுமையான குளிர் மற்றும் மழைக்கால வேளையில் சோபோமோரேவுக்கு முதலுதவி அளித்து உள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், இரவு வரை கடுமையாக போராடியும் அவரை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை.

அவர் மரணம் அடைந்து விட்டார். அவரது பெற்றோரான என்டிரோடா மற்றும் டுவெய்னே ஹியூஜஸ் கூறும்போது, சோபோமோரேவுக்கு இசை, நடனம் என்றால் அவ்வளவு விருப்பம். தன்னை சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் நேசித்தவர்.

அவர், தனது வாழ்வின் உண்மையான காதல் என கால்பந்து விளையாட்டை கூறி வருவார் என நினைவு கூர்ந்து உள்ளனர். கால்பந்து விளையாட்டின்போதே சிறுமி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது சக மாணவ மாணவிகளிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் லட்சக்கணக்கானோர் பார்த்து கொண்டிருந்த கால்பந்து போட்டியில் விளையாடிய தமர் ஹேம்லின் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.




Next Story