பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்...!


பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்...!
x

Image Courtesy: @FIFAWWC

பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது.

பிரிஸ்பேன்,

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட 32 அணிகளில் இருந்து 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 2வது சுற்றுக்கு (நாக் அவுட்) முன்னேறின.

தொடரில் இதுவரை ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், இங்கிலாந்து, கொலம்பியா, ஆஸ்திரேலியா ஆகிய 7 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தன. இந்நிலையில் காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் கடைசி அணி எது என்பதை தீர்மானிக்க பிரான்ஸ் - மொரோக்கோ அணிகள் இன்று மோதின.

இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி முதல் பாதியிலேயே 3 கோல்களை அடித்து அசத்தியது. 2வது பாதியில் மேலும் ஒரு கோல் அடித்து வலுவான முன்னிலை பெற்றது. மொரோக்கோ அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

முடிவில் பிரான்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோவை வீழ்த்தி 8வது அணியாக காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின் - நெதர்லாந்து, ஜப்பான் - சுவீடன், இங்கிலாந்து - கொலம்பியா, ஆஸ்திரேலியா - பிரான்ஸ் அணிகள் மோத உள்ளன.

1 More update

Next Story