பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து-நார்வே இடையிலான ஆட்டம் டிரா


பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து-நார்வே இடையிலான ஆட்டம் டிரா
x

Image Courtesy : @FIFAWWC twitter

சுவிட்சர்லாந்து-நார்வே இடையிலான ஆட்டம் கோலின்றி (0-0) டிராவில் முடிந்தது.

சிட்னி,

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் அமெரிக்கா, முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஜப்பான், நார்வே உள்ளிட்ட 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு முன்னேறும்.

6-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 'ஏ' பிரிவில் நடைபெற்ற ஹாமில்டனில் நடந்த சுவிட்சர்லாந்து-நார்வே அணிகள் மோதின. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோலின்றி (0-0) டிராவில் முடிந்தது. தொடர்ந்து இன்றைய லீக் ஆட்டங்களில் ஜப்பான்-கோஸ்டாரிகா, ஸ்பெயின்-ஜாம்பியா, கனடா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.


Next Story