உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் டிரா

image courtesy: twitter/ @IndianFootball
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
அபா,
ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.
இதில் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிவடைந்தது.
புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெறும் அணி மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். இதுவரை 3 போட்டிகளில் (முதல் கட்ட தகுதிச்சுற்றில் 2 போட்டிகள்) விளையாடியுள்ள இந்திய அணி தலா ஒரு வெற்றி, தோல்வி மற்றும் சமன் என 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story






