"ரொனால்டோவை பிடிக்கும் என்பதற்காக மெஸ்சியை வெறுக்கத் தேவையில்லை" -மனம் திறந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ


ரொனால்டோவை பிடிக்கும் என்பதற்காக மெஸ்சியை வெறுக்கத் தேவையில்லை -மனம் திறந்த  கிறிஸ்டியானோ ரொனால்டோ
x

பலோன் டி ’ஓர் விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

புது டெல்லி,

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதிற்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ பெயர் இடம்பெறவில்லை. 20 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேவேளையில் அர்ஜெண்டினாவை சேர்ந்த நட்சத்திர வீரரான மெஸ்சியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் தற்போது இது பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரொனால்டோ பேசியுள்ளார். அதில்,

"கடந்த 15 வருடங்களாக நானும் மெஸ்சியும் சிறப்பாகச் செய்துள்ளோம். கால்பந்து வரலாற்றை மாற்றியுள்ளோம். உலகம் முழுவதும் நாங்கள் மதிக்கப்படுகிறோம், அதுதான் மிக முக்கியமான விஷயம். அவர் அவருடைய பாதையைப் பின்பற்றினார். நான் ஐரோப்பாவிற்கு வெளியே விளையாடுவதைப் பொருட்படுத்தாமல் என்னுடையதைப் பின்பற்றினேன்.

நாங்கள் பல முறை மேடையை ஒன்றாக பகிர்ந்து கொண்டோம். நாங்கள் நண்பர்கள் என்று சொல்லவில்லை என்றாலும், ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர மரியாதை கொண்டவர்கள். ரொனால்டோவை பிடிக்கும் என்பதால் மெஸ்சியை வெறுக்கத் தேவையில்லை. பகைமை என்பது முடிந்துவிட்டது'' என கூறியுள்ளார்.

பலோன் டி 'ஓர் விருதை மெஸ்சி 7 முறையும், ரொனால்டோ 5 முறையும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story