அகில இந்திய ஆக்கி: தமிழக அணி 2-வது தோல்வி


அகில இந்திய ஆக்கி: தமிழக அணி 2-வது தோல்வி
x

அகில இந்திய ஆக்கி போட்டியில் தமிழக அணி 1-3 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவ அணியிடம் பணிந்தது.

சென்னை,

எம்.சி.சி.- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி 1-3 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவ அணியிடம் பணிந்தது. ராணுவ அணியில் பிரதாப் ஷிண்டே 2 கோலும், ஹர்மன்சிங் ஒரு கோலும் அடித்தனர். 3-வது ஆட்டத்தில் ஆடி 2-வது தோல்வியை தழுவிய தமிழக அணியின் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.

முன்னதாக நடந்த மற்ற ஆட்டங்களில் தணிக்கை துறை அலுவலக அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படை அணியையும், இந்திய ரெயில்வே 4-1 என்ற கோல் கணக்கில் கடற்படை அணியையும் வென்றது.


Next Story