ஆசிய ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மலேசியா


ஆசிய ஆக்கி:  இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மலேசியா
x
தினத்தந்தி 11 Aug 2023 3:22 PM GMT (Updated: 11 Aug 2023 3:22 PM GMT)

முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா- மலேசியா அணிகள் மோதின.

சென்னை,

ஆசிய சாம்பியன் கோப்பை ஆக்கி தொடரில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா- மலேசியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மலேசிய அணி தரப்பில் அஸ்ராய் (3வது நிமிடம்), ஜஸ்லான் (9 மற்றும் 21வது நிமிடம்), சாரி (19வது நிமிடம்), சில்வரியஸ் (47 மற்றும் 48வது நிமிடம்) கோல் அடித்தனர். தென் கொரிய அணியில் ஜி 2வது நிமிடத்திலும், ஜாங் 14வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.


Next Story