முதலாவது டிவிசன் ஆக்கி லீக்: ஆர்.வி.அகாடமி அபாரம்


முதலாவது டிவிசன் ஆக்கி லீக்: ஆர்.வி.அகாடமி அபாரம்
x

ஆர்.வி.அகாடமி 1-0 என்ற கோல் கணக்கில் சி.டி.எஸ். அணியை வென்றது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஆர்.வி.அகாடமி அணி 7-2 என்ற கோல் கணக்கில் திருமால் கிளப்பை தோற்கடித்தது. ஆர்.வி.அகாடமி அணியில் சேது பாண்டியன், அமீன்ஷா தலா 2 கோலும், விஜய், டினு ஆனந்த், அருண் பாண்டியா தலா ஒரு கோலும் அடித்தனர்.

திருமால் கிளப்பில் வீரகண்ணன் 2 கோல் திருப்பினார். மற்றொரு ஆட்டத்தில் ஆர்.வி.அகாடமி 1-0 என்ற கோல் கணக்கில் சி.டி.எஸ். அணியை வென்றது. ஆர்.வி.அகாடமி அணியில் அருண் 14-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் கனரக வாகன தொழிற்சாலை-சேப்பாக் யங்ஸ்டர்ஸ் (பகல் 12.15 மணி), ரிசர்வ் வங்கி-அடையார் யுனைடெட் (பகல் 1.30 மணி), தமிழ்நாடு தபால் துறை-வேளச்சேரி கிளப் (பிற்பகல் 2.45 மணி), மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம்-ஆர்.வி.அகாடமி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story