புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு


புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
x

image courtesy: HI media twitter via ANI

புரோ ஆக்கி லீக்கில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி இதுவரை நியூசிலாந்து, ஸ்பெயின் அணிகளுடன் தலா 2 முறை மோதி இருக்கிறது. இந்திய அணி 2 வெற்றி (நியூசிலாந்துக்கு எதிராக), ஒரு தோல்வி, ஒரு டிரா கண்டு 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

இந்திய அணி அடுத்து ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலாவில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் உலக சாம்பியன் ஜெர்மனி, தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை சந்திக்கிறது. இந்தியா-ஜெர்மனி அணிகள் மோதும் ஆட்டம் மார்ச் 10, 13-ந் தேதிகளிலும், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆட்டம் மார்ச் 13, 15 ஆகிய தேதிகளிலும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

புரோ ஆக்கி லீக்கில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நீடிக்கிறார். துணை கேப்டனாக ஹர்திக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். கோல் கீப்பராக அனுபவம் வாய்ந்த ஸ்ரீஜேஷ், இளம் வீரர் பவண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கோல் கீப்பர் கிருஷ்ணன் பகதூர் பதாக்குக்கு திருமணம் நடக்க இருப்பதால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக டேவிட் ஜான், கரியப்பா ஆகியோர் ஷிவேந்திர சிங்குடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆக்கி அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், பவண், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ஜூக்ராஜ் சிங், நீலம் சஞ்சீப் சக்செஸ், ஜர்மன்பிரீத் சிங், சுமித், மஞ்சீத், மன்பிரீத் சிங், நடுகளம்: ஹர்திக் சிங் (துணை கேப்டன்), விவேக் சாகர் பிரசாத், மொய்ராங்தெம் ரபிசந்திரசிங், விஷ்ணுகாந்த் சிங், தில்பிரீத் சிங், ஷம்ஷீர் சிங், ராஜ்குமார் பால், முன்களம்: எஸ்.கார்த்தி, சுக்ஜீத் சிங், அபிஷேக், குர்ஜந்த் சிங்.


Next Story