ஆக்கி ஆடவர் ஜூனியர் உலக கோப்பை போட்டி; இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்


ஆக்கி ஆடவர் ஜூனியர் உலக கோப்பை போட்டி; இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்
x

இந்திய வீரர்கள் ஆதித்ய அர்ஜுன், ரோகித் மற்றும் அமன்தீப் லக்ரா ஆகியோர் தலா 2 கோல்களை போட்டனர்.

கோலாலம்பூர்,

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் புகிட் ஜலீல் பகுதியில் உள்ள தேசிய ஆக்கி மைதானத்தில், சர்வதேச ஆக்கி கூட்டமைப்பின் ஆக்கி ஆடவர் ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த போட்டி ஒன்றில் இந்தியா மற்றும் கனடா அணிகள் விளையாடின. இந்த போட்டியில், இந்திய ஆக்கி ஆடவர் அணி அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து கோல்களை போட்டு வெற்றியை தன்வசப்படுத்தியது.

இந்திய வீரர்கள் ஆதித்ய அர்ஜுன், ரோகித் மற்றும் அமன்தீப் லக்ரா ஆகியோர் தலா 2 கோல்களை போட்டனர். விஷ்ணுகாந்த், ரஜீந்தர், குஷ்வாஹா சவுரப் மற்றும் உத்தம் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

கனடா சார்பில் ஜூட் நிக்கல்சன் ஒரே ஒரு கோலை போட்டார். இதனால் போட்டி முடிவில் 10-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. போட்டி தொடரில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.

1 More update

Next Story