உலக கோப்பை ஆக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 9-வது இடம் பிடித்தது இந்தியா


உலக கோப்பை ஆக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 9-வது இடம் பிடித்தது இந்தியா
x

image courtesy: Hockey India twitter

9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.

ரூர்கேலா,

16 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இதற்கிடையே, ரூர்கேலாவில் நேற்று நடந்த 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.

இந்திய அணியில் அபிஷேக் 5-வது நிமிடத்திலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 12-வது நிமிடத்திலும், ஷாம்ஷெர் சிங் 45-வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 49-வது நிமிடத்திலும், சுக்ஜீத் சிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

தென்ஆப்பிரிக்க தரப்பில் மிம்வி சாம்கிலோ 49-வது நிமிடத்திலும், முஸ்தபா காசிம் 60-வது நிமிடத்திலும் கோல் திருப்பினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அர்ஜென்டினாவுடன் இணைந்து 9-வது இடத்தை பெற்றது.


Next Story