இந்திய ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி; மத்தியப் பிரதேசம் சாம்பியன் பட்டம் வென்றது

image courtesy;twitter @TheHockeyIndia
இறுதிப் போட்டியில் சண்டிகர் அணியை விழ்த்தி மத்திய பிரதேச அணி கோப்பையை கைப்பற்றியது.
ஒடிசா,
13-வது இந்திய ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடைபெற்றது.
நேற்று பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சண்டிகர் மற்றும் மத்தியப் பிரதேச அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சண்டிகர் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் மத்தியப் பிரதேச அணி விழ்த்தி 13-வது இந்திய ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது.
இறுதிப் போட்டியில் மத்தியப் பிரதேச அணி வீரர்கள் ஷ்ரேயாஸ் துபே, முகமது கொனைன் அப்பா, அலி அகமது,ஆகியோர் கோல் அடித்தனர். அதேசமயம் சண்டிகர் அணியில் சுமித் மற்றும் சுரிந்தர் சிங் மட்டுமே தலா ஓரு கோல் அடித்தனர்.
3 மற்றும் 4-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஹரியானா 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா ஹாக்கி சங்கத்தை தோற்கடித்தது.
Related Tags :
Next Story






