சர்வதேச ஜூனியர் பெண்கள் ஆக்கி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா ஆட்டம் 'டிரா'


சர்வதேச ஜூனியர் பெண்கள் ஆக்கி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா ஆட்டம் டிரா
x

இந்திய ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் மோதி வருகிறது.

கேப்டவுன்,

இந்திய ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் மோதி வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய ஜூனியர் பெண்கள் அணி, தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணியில் நீலம், தரண்பிரீத் கவுர் தலா ஒரு கோலும், தீபிகா 2 கோலும் அடித்தனர். தென்ஆப்பிரிக்க அணியில் குயினிட்டா போப்ஸ் 2 கோலும், பிம்கா வுட், தரின் லோம்பார்ட் தலா ஒரு கோலும் அடித்தனர்.

முன்னதாக நடந்த 21 வயதுக்கு உட்பட்ட தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் இந்திய ஜூனியர் அணி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story