தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி அபார வெற்றி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 27 Jan 2024 8:00 PM GMT (Updated: 27 Jan 2024 8:00 PM GMT)

இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கேப்டவுன்,

இந்திய ஆக்கி அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்த இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பிரான்சுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஆட்டம் கேப்டவுனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (2-வது நிமிடம்), அபிஷேக் (13-வது நிமிடம்), சுமித் (30-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று நெதர்லாந்துடன் மோதுகிறது.


Next Story