புரோ ஆக்கி லீக் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு


புரோ ஆக்கி லீக் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
x

image courtesy; twitter/@TheHockeyIndia

இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 10-ந் தேதி ஸ்பெயினை சந்திக்கிறது.

புதுடெல்லி,

9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதன் 2 சுற்று லீக் ஆட்டங்கள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வர் (10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை) மற்றும் ரூர்கேலாவில் (19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை) நடைபெற உள்ளது.

இதில் இந்திய அணி, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் தலா 2 முறை மோதுகிறது. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 10-ந் தேதி ஸ்பெயினை சந்திக்கிறது. இந்த தொடருக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங்கும், துணை கேப்டனாக ஹர்திக் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

24 பேர் கொண்ட இந்திய ஆக்கி அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிஷான் பகதூர் பதாக்.

பின்கள வீரர்கள்: ஜர்மன்பிரீத் சிங், சுமித், ஜூக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், சஞ்சய், விஷ்ணுகாந்த் சிங்.

நடுகள வீரர்கள்: ஹர்திக் சிங் (துணை கேப்டன்), விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட ஷர்மா, ஷாம்ஷெர் சிங், ராஜ்குமார் பால், ரபிசந்திரா சிங் மொய்ராங்தெம்.

முன்கள வீரர்கள்: லலித் குமார் உபாத்யாய், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், அபிஷேக், ஆகாஷ்தீப் சிங், அரைஜீத் சிங் ஹூன்டால்.


Next Story