ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி
x

image courtesy: HI via ANI

இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது.

அடிலெய்டு,

ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கிலும் தோல்வி கண்டு 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 3-வது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதையடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா 'ஏ' பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது. திரில்லிங்கான இந்த மோதலில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா 'ஏ' அணியிடம் பணிந்தது. ஆஸ்திரேலிய 'ஏ' அணியில் அலிஸ் அர்னோட் 18-வது நிமிடத்திலும், ரூபி ஹாரிஸ் 20-வது, 35-வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர்.

இந்திய அணி தரப்பில் சலிமா டெடி 40-வது நிமிடத்திலும், சங்கீதா குமாரி 54-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினர். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.


Next Story