சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய பெண்கள் அணி - ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்


சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய பெண்கள் அணி - ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்
x

பெண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹாராவில் இன்று தொடங்குகிறது.

சலாலா,

ஆண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.

இந்த நிலையில் பெண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹாராவில் இன்று தொடங்குகிறது. ஜூன் 11-ந்தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் கேப்டன் பிரீத்தி தலைமையிலான இந்திய ஜூனியர் பெண்கள் அணி 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த பிரிவில் நான்கு முறை சாம்பியனான கொரியா, மலேசியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் சீன தைபே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஜப்பான், சீனா, இந்தோனேசியா, கஜகஸ்தான் மற்றும் ஹாங்காங் சீனா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

நாளை உஸ்பெகிஸ்தானுடன் மோதும் இந்திய அணி, ஜூன் 5-ம் தேதி மலேசியாவை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 6-ந்தேதி கொரியா மற்றும் ஜூன் 8-ந்தேதி சீன தைபே அணிகளுடன் மோதுகிறது. ரவுண்ட்-ராபின் சுற்றுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்.

ஜூனியர் ஆசியக் கோப்பையில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள், இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் டிசம்பர் 10 வரை சிலியின் சாண்டியாகோவில் நடைபெறவுள்ள ஜூனியர் மகளிர் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story