ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி: ஸ்பெயின் அணியிடம் வீழ்ந்த இந்தியா!


ஜூனியர் ஆண்கள்  உலகக்கோப்பை ஆக்கி: ஸ்பெயின் அணியிடம் வீழ்ந்த இந்தியா!
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

இந்திய அணி தரப்பில் ரோகித் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

கோலாலம்பூர்,

13-வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இந்திய அணி 'சி' பிரிவில் ஸ்பெயின், கனடா, தென்கொரியா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் வலுவான ஸ்பெயினுடன் இன்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் ரோகித் மட்டுமே ஒரு கோல் அடித்தார். ஸ்பெயின் தரப்பில் கேப்ரே வெர்டீல் மற்றும் ஆண்ட்ரியாஸ் ரபி தலா 2 கோல்கள் அடித்து அணி வெற்றி பெற உதவினர்.


Next Story