தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம்........!!!

image courtesy;twitter @TheHockeyIndia
113-வது தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் இன்று தொடங்குகிறது.
ஓடிசா,
13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் ஓடிசா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பிஸ்ரா முண்டா ஹாக்கி மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது.
இந்த தொடரில் தமிழக அணி உட்பட மொத்தம் 28 அணிகள் இடம் பெற்றுள்ளன.அவை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
நடப்பு சாம்பியன் மற்றும் இரண்டு முறை சாம்பியனுமான அரியானா அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
தமிழக அணி 'சி' பிரிவில் ஓடிசா மற்றும் மணிப்பூர் அணிகளுடன் இடம் பெற்று உள்ளது.
இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Related Tags :
Next Story






