இந்திய ஆக்கி அணிக்கு ஒடிசா மாநில அரசு பரிசுத்தொகை வழங்கி கவுரவிப்பு

image courtesy:twitter/@DilipTirkey
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி தொடரில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது.
புவனேஸ்வர்,
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி தொடரில் ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஆக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது. வெண்கல பதக்கம் வென்ற ஆக்கி அணிக்கு பல மாநில அரசுகள் பாராட்டுகளையும், பரிசுத்தொகையையும் வழங்கி கவுரவித்து வருகின்றன.
அந்த வகையில் இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு ஒடிசா மாநில அரசு சார்பில் புவனேஸ்வரில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் அந்த மாநிலத்தை சேர்ந்த வீரர் அமித் ரோஹிதாசுக்கு ரூ,4 கோடியும், சீனியர் வீரர் ஸ்ரீஜேசுக்கு ரூ,50 லட்சமும், அணியின் மற்ற வீரர்களுக்கு தலா ரூ,15 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story