தபால் துறை அகில இந்திய ஆக்கி: தமிழக அணி 'சாம்பியன்'


தபால் துறை அகில இந்திய ஆக்கி: தமிழக அணி சாம்பியன்
x
தினத்தந்தி 16 Feb 2024 9:00 PM GMT (Updated: 16 Feb 2024 9:00 PM GMT)

இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

சென்னை,

தபால் துறையினருக்கான 35-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

தமிழக அணி தரப்பில் சுதர்ஷன் (7-வது நிமிடம்), நவீன் குமார் (18-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். கர்நாடகா தரப்பில் ரமேஷ் (45-வது நிமிடம்) பதில் கோல் திருப்பினார். மத்தியபிரதேசம் 3-வது இடத்தையும், ஒடிசா 4-வது இடத்தையும் பெற்றன. பஞ்சாப் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் இந்திய தபால் துறை டைரக்டர் ஜெனரல் ஸ்மிதா குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.


Next Story