புரோ ஆக்கி லீக்: இந்திய பெண்கள் அணிக்கு ஏமாற்றம்


புரோ ஆக்கி லீக்: இந்திய பெண்கள் அணிக்கு ஏமாற்றம்
x

Image Courtesy: @TheHockeyIndia

9 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

லண்டன்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.

ஒரு கட்டத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி 4 நிமிடங்களில் இங்கிலாந்தின் கிரேஸ் பால்ட்சன் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்து கோல் போட்டு தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 8-வது தோல்வி இதுவாகும். தனது கடைசி லீக்கை முடித்து விட்ட இந்தியா மொத்தத்தில் 3 வெற்றி, 13 தோல்வி என 8 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டு ஏமாற்றம் அளித்தது.


Next Story
  • chat