புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்...!


புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்...!
x

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

ரூர்கேலா,

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இன்று முதல் 15-ந் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய 3 அணிகள் பங்கேற்கும் 6 ஆட்டங்கள் நடக்கிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, உலக சாம்பியன் ஜெர்மனியை சந்திக்கிறது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

ஜெர்மனி அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.


Next Story