புரோ ஆக்கி லீக் தொடர் - இந்திய அணியை வீழ்த்தியது நெதர்லாந்து


புரோ ஆக்கி லீக் தொடர் - இந்திய அணியை வீழ்த்தியது நெதர்லாந்து
x

நெதர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தோவான்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நெதர்லாந்தில் உள்ள இந்தோவான் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியா, 'நம்பர் ஒன்' அணியான நெதர்லாந்தை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் 11-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் அடித்தார். அதன் பிறகு முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

நெதர்லாந்து அணியில் பெப்ஜின் ரெயேங்கா 17-வது நிமிடத்திலும், போரிஸ் பர்க்ஹார்ட் 40-வது நிமிடத்திலும், தெல்கென்காம்ப் 41-வது மற்றும் 58-வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடிய நெதர்லாந்து அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 13-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.


Next Story