புரோ ஆக்கி லீக்: இந்திய அணியில் தமிழக வீரர் கார்த்தி


புரோ ஆக்கி லீக்: இந்திய அணியில் தமிழக வீரர் கார்த்தி
x

நியூசிலாந்து மற்றும் ஸ்பெயினுக்கு எதிரான லீக் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரரான கார்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை,

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோத வேண்டும்.

இதன் முடிவில் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். புவனேஷ்வரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அடுத்து இந்திய அணி 30-ந் தேதி ஸ்பெயினையும், நவம்பர் 4-ந் தேதி மீண்டும் நியூசிலாந்தையும், 6-ந் தேதி மறுபடியும் ஸ்பெயினையும் சந்திக்கிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து மற்றும் ஸ்பெயினுக்கு எதிரான லீக் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரரான கார்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story