சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஐ.சி.எப். - தெற்கு ரெயில்வே ஆட்டம் 'டிரா'


சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஐ.சி.எப். - தெற்கு ரெயில்வே ஆட்டம் டிரா
x

59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப்.-தெற்கு ரெயில்வே அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் (டிரா) முடிந்தது. ஐ.சி.எப். அணியில் சஞ்சய், பிருத்வி தலா ஒரு கோலும், தெற்கு ரெயில்வே அணியில் சண்முகம் 2 கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய உணவு கழகத்தை தோற்கடித்தது. எஸ்.டி.ஏ.டி. அணியில் திலீபன், ஆனந்த் ராஜ் தலா ஒரு கோலும், இந்திய உணவு கழக அணியில் யாதிஷ் குமார் ஒரு கோலும் போட்டனர்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஐ.ஓ.பி.-ஸ்டேட் வங்கி (பிற்பகல் 2 மணி), இந்தியன் வங்கி-சென்னை மாநகர போலீஸ் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story