"நான் அணியில் இடம் பெறுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை": ஆக்கி வீராங்கனை தீபிகா


நான் அணியில் இடம் பெறுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை: ஆக்கி வீராங்கனை தீபிகா
x

image courtesy; twitter/@TheHockeyIndia

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணியில் தீபிகா இடம்பெற்றுள்ளார்.

பெங்களூரு,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி அடுத்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதில் இந்திய பெண்கள் ஆக்கி அணியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை தீபிகா இடம்பெற்றுள்ளார்.

அணியில் இடம்பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தீபிகா, அணியில் இடம்பெற எல்லோரும் போட்டியிடும் நிலையில், நான் இடம் பெறுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை என கூறியுள்ளார்.

மேலும், நான் ஒரு பெரிய தொடருக்கு செல்வது இது முதல் முறை. இதனால் நான் முதலில் கொஞ்சம் பதட்டமடைந்தேன். ஆனால் தலைமை பயிற்சியாளர் ஸ்கோப்மேன் மற்றும் சீனியர் வீரர்கள் என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர் என கூறியுள்ளார்.

1 More update

Next Story