மகளிர் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி


மகளிர் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
x

image courtesy; AFP

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின.

மஸ்கட்,

முதலாவது ஐவர் மகளிர் ஆக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இதில் 16 நாடுகள் பங்கேற்றிருந்தன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

இதில் இந்தியா 'சி பிரிவில்' அமெரிக்கா, போலந்து, நமீபியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றிருந்தது. இந்திய அணி தனது லீக் சுற்று ஆட்டத்தில் தோல்வியே சந்திக்காமல் காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தையும், அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து 7-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி முதலாவது மகளிர் 5 பேர் ஆக்கி உலகக்கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

ஆக்கி இந்தியா கூட்டமைப்பு, 2-வது இடம்பெற்ற இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு தலா 3லட்சமும், ஊழியர்களுக்கு தலா 1.5 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.


Next Story