ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றி


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 28 Oct 2023 7:23 PM GMT (Updated: 29 Oct 2023 8:52 AM GMT)

இந்திய அணியில் வந்தனா கட்டாரியா 2 கோலும், சங்கீதா குமாரி, லால்ரெம்சியாமி , ஜோதி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

ராஞ்சி,

பெண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது.

இதில் 2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணியில் வந்தனா கட்டாரியா 2 கோலும், சங்கீதா குமாரி, லால்ரெம்சியாமி , ஜோதி தலா ஒரு கோலும் அடித்தனர்.

மற்ற ஆட்டங்களில் சீன அணி 6-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தையும், நடப்பு சாம்பியன் ஜப்பான் 4-0 என்ற கோல் கணக்கில் 3 முறை சாம்பியனான தென்கொரியாவையும் தோற்கடித்தன. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

நாளை நடைபெறும் ஆட்டங்களில் தென்கொரியா-மலேசியா (மாலை 4 மணி), தாய்லாந்து-ஜப்பான் (மாலை 6.15 மணி), இந்தியா-சீனா (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story