தேசிய ஜூனியர் கைப்பந்து: தமிழக அணிகள் அறிவிப்பு


தேசிய ஜூனியர் கைப்பந்து: தமிழக அணிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2017 10:30 PM GMT (Updated: 12 Jan 2017 7:35 PM GMT)

சென்னை, 43–வது தேசிய ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 19–ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான தமிழக ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் அறிவித்துள்ளார். தமிழக அணிகள் வருமாறு:–

ஆண்கள் அணி: மிகீல்சின், சபரி (இருவரும் நெல்லை), ஜெகன், அஸ்வின் குமார் (இருவரும் கிருஷ்ணகிரி), ஷாய்க் முகமது (விருதுநகர்), தேசியன், குருபிரசாத் (இருவரும் திருச்சி), ரஞ்சித் குமார் (திருவாரூர்), கிருஷ்ணகுமார் (கடலூர்), அரவிந்தன் (தஞ்சாவூர்), ஜெட்லீ பெர்னாண்டோ (தூத்துக்குடி), அவினேஷ் ரோகன் (சென்னை), தலைமை பயிற்சியாளர்: தினகரன், உதவி பயிற்சியாளர்: தினேஷ்.

பெண்கள் அணி: அனுபிரியா, போதினி, ஜோதி, அனிஷா (4 பேரும் சென்னை), ரம்யா பிரியா (காஞ்சீபுரம்), ஷாலினி, ஸ்வாதினி, சுப்ரஜா (மூவரும் சேலம்), ஜெனிபர், செல்வபாரதி (இருவரும் ஈரோடு), மாளவிகா (திருச்சி), நர்மதா (தர்மபுரி), தலைமை பயிற்சியாளர்: கிருஷ்ணமூர்த்தி.


Next Story