மலேசிய பேட்மிண்டனில் சாய்னா பங்கேற்கிறார்


மலேசிய பேட்மிண்டனில் சாய்னா பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 16 Jan 2017 8:50 PM GMT (Updated: 16 Jan 2017 8:50 PM GMT)

மொத்தம் ரூ.82 லட்சம் பரிசுத்தொகைக்கான மலேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சரவாக் நகரில் இன்று தொடங்குகிறது.

சரவாக்,

முதல் நாளில் காலையில் தகுதி சுற்று ஆட்டங்களும், மாலையில் பிரதான சுற்று ஆட்டங்களும் நடக்கின்றன.

இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் பங்கேற்கிறார். கடந்த ஆண்டில் காயத்தோடு பெரும் போராட்டமே நடத்திய சாய்னா நேவால் அடிமேல் அடி வாங்கினார். அவற்றில் இருந்து ஒரு வழியாக மீண்டு வந்துள்ள சாய்னா நேவால் புதிய சீசனை வெற்றியோடு தொடங்கும் ஆவலில் தன்னை தயார்படுத்தியுள்ளார். அவர் முதல் சுற்றில் தகுதி நிலை வீராங்கனையை சந்திக்கிறார். ஆண்கள் பிரிவில் அஜய் ஜெயராம், ராகுல் யாதவ், பிரதுல் ஜோஷி, அபிஷேக், சிரில் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் கலந்து கொள்கிறார்கள்.


Next Story