சென்னை ஓபன் செஸ்: உக்ரைன் வீரர் ‘சாம்பியன்’ கோப்பையுடன் துக்ஹாவ் ஆடம்


சென்னை ஓபன் செஸ்: உக்ரைன் வீரர் ‘சாம்பியன்’ கோப்பையுடன் துக்ஹாவ் ஆடம்
x
தினத்தந்தி 25 Jan 2017 11:15 PM GMT (Updated: 25 Jan 2017 7:37 PM GMT)

9-வது சென்னை ஓபன் கிராண்ட்மாஸ்டர் செஸ் (சதுரங்கம்) போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த 10-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் உக்ரைன் கிராண்ட்மாஸ்டர் துக்ஹாவ் ஆடம், ஜிப் அட்டிலாயை (ஹங்கேரி) சந்தித்தார்.

சென்னை,

 இந்த ஆட்டம் சிறிது நேரத்தில் டிராவில் முடிந்தது. 10 சுற்று முடிவில் துக்ஹாவ் 8.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தலா 8 புள்ளிகள் பெற்ற டேவிட் அல்பர்டோ (இத்தாலி), ஜிப் அட்டிலா (ஹங்கேரி), மாலாகாத்கோ வாடிம் (பெல்ஜியம்), நிதின் (இந்தியா) ஆகியோர் முறையே 2 முதல் 5 இடங்களை பிடித்தனர். சாம்பியன் பட்டம் வென்ற துக்ஹாவ் ஆடம், டாக்டர் எம். மகாலிங்கம் கோப்பையுடன், ரூ.2 லட்சத்தை பரிசாக பெற்றார்.

 முதல் 60 இடங்களை பிடித்தவர்களுக்கு மொத்தம் ரூ.11 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது. விழாவில், தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் ராஜேந்திரகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

Next Story