துளிகள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது.
* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடரில் பங்கேற்க இருக்கும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் அறிவுரை வழங்கி இருக்கிறார். அதில், ‘சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதை ஆஸ்திரேலிய அணியினர் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும். சுழற்பந்து வீச்சை கையாள தெரியாவிட்டால், ஆஸ்திரேலிய அணி, இந்தியா சென்று விளையாடுவதை தவிர்த்து விடலாம்’ என்று தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து திணறி வருகிறது. 2004-ம் ஆண்டு முதல் இங்கு 20 டெஸ்டில் விளையாடி இருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டியில் தான் வென்று இருக்கிறது. இதில் வங்காளதேசத்துக்கு எதிரான 2 வெற்றியும் அடங்கும்.
* இலங்கை கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தென்ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கிடையில் டர்பனில் நடந்த 2-வது போட்டியில் ஆட்டம் இழக்காமல் 117 ரன்கள் குவித்த தென்ஆப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர் பீல்டிங் செய்கையில் வலது கை சுண்டு விரலில் காயம் அடைந்தார். காயத்துக்கு தையல் போட்டு இருப்பதால் அவர் களம் திரும்ப 10 நாட்கள் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கைக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டி தொடரில் இருந்து டேவிட் மில்லர் விலகி இருக்கிறார்.
* இலங்கை கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மெல்போர்னில் 17-ந் தேதியும், 2-வது போட்டி விக்டோரியாவில் 19-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி அடிலெய்டில் 22-ந் தேதியும் நடக்கிறது. முன்னதாக கான்பெர்ராவில் 15-ந் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி, ஆடம் வோக்ஸ் தலைமையிலான பிரதம மந்திரி லெவன் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டத்துக்கு பிரதம மந்திரி லெவன் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் கிளார்க் பயிற்சியாளராக பணியாற்றும் முதல் போட்டி இதுவாகும்.
* நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர் உள்ளூர் போட்டியில் தான் வீசிய பந்தை பீல்டிங் செய்கையில் கைவிரலில் காயம் அடைந்தார். எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அவர் உடல் தகுதியை எட்ட 6 வாரம் வரை பிடிக்கும் என்று தெரிகிறது. இதனால் மார்ச் 8-ந் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் நீல் வாக்னர் விளையாடுவது சந்தேகம் தான்.
* சர்வதேச கூடைப்பந்து போட்டிகளில் சீக்கிய வீரர்கள் தலைப்பாகை (டர்பன்) அணிந்து விளையாட தடை இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து சர்வதேச கூடைப்பந்து பெடரேஷன் விதிமுறையில் இதற்கான திருத்தம் கொண்டு வர மத்திய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறை திருத்தம் மே மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச கூடைப்பந்து சம்மேளன கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
* ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நடுவரான லூயிஸ் பாட்ரிக் ரோவன் நேற்று மரணம் அடைந்தார். அதிக நாள் உயிர்வாழ்ந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் நடுவர் என்ற பெருமைக்குரிய அவருக்கு வயது 91. லூயிஸ் பாட்ரிக் ரோவன் 1963 முதல் 1971-ம் ஆண்டு வரை 25 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றினார். ஒரே ஒரு ஒருநாள் போட்டிக்கும் நடுவராக இருந்து இருக்கிறார்.
* ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு அரை இறுதி ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்-பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் வீரர் சாம் ஒயிட்மேன் அடித்த பந்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. ஆனால் பந்து பேடில் பட்டு சென்றதாக கருதிய நடுவர் ‘நாட்-அவுட்’ என்று தவறுதலான முடிவை அறிவித்தார். இந்த போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆடிய கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) நடுவரின் முடிவை உடனடியாக விமர்சித்தார். முழுமையான அதிர்ச்சி என்று அவர் வெளிப்படையாக தெரிவித்த கருத்து மைக்ரோபோன் வாயிலாக போட்டியை ஒளிபரப்பிய டெலிவிஷனின் நேரடி வர்ணனையில் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழு கெவின் பீட்டர்சனுக்கு ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்தை அபராதமாக விதித்துள்ளது.

Next Story