இலங்கையில் தெற்காசிய கராத்தே போட்டி

4–வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் ஆகஸ்டு 3–ந் தேதி முதல் 6–ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த 400 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த ப
சென்னை,
4–வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் ஆகஸ்டு 3–ந் தேதி முதல் 6–ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த 400 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டி நடைபெறும் இடங்களை தெற்காசிய மற்றும் இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், பொதுச்செயலாளர் பரத் சர்மா உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தனர். அத்துடன் அவர்கள் இலங்கை விளையாட்டு மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகரா, இலங்கை கராத்தே சங்கம் மற்றும் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று கராத்தே ஆர்.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story