உலக பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் அரை இறுதி போட்டிக்கு ஹரீகா துரோணவல்லி முன்னேறினார்


உலக பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் அரை இறுதி போட்டிக்கு ஹரீகா துரோணவல்லி முன்னேறினார்
x
தினத்தந்தி 23 Feb 2017 4:37 PM GMT (Updated: 23 Feb 2017 4:37 PM GMT)

இந்திய செஸ் வீராங்கனை ஹரீகா துரோணவல்லி உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டெஹ்ரான்,

ஈரானில் உலக பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக இன்று நடந்த போட்டியில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் என அழைக்கப்படும் ஹரீகா, ஜார்ஜியா நாட்டின் நானா டிஜேக்னிட்ஜே உடன் விளையாடினார்.

இந்த போட்டியின் டை-பிரேக்கர் விரைவு சுற்றில் ஹரீகா வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.  உலக பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தனது திறமையான ஆட்டத்தினால் அரை இறுதிக்கு முன்னேறியுள்ள ஹரீகா, சீனாவின் டான் ஜோங்கியுடன் விளையாட இருக்கிறார்.

நானாவை விட ஒரு புள்ளி முன்னிலையுடன் இருந்த நிலையிலும் போட்டி டை பிரேக் வரை சென்றது.  ஆனால், போட்டியை தன் வசப்படுத்தினார் ஹரீகா.  இதற்கு முன் நடந்த முதல் போட்டியில் வங்காளதேசத்தின் ஷமீமா அக்தர் லிசாவை டை பிரேக்கில் வீழ்த்தினார் ஹரீகா.

அதன்பின் கஜகஸ்தானின் டினாரா சஜுவாகசோவா மற்றும் ஜார்ஜியாவின் சோபிகோ குராமிஷ்விலி ஆகியோரையும் டை பிரேக் முறையிலேயே அவர் வீழ்த்தினார்.  நானாவை வெற்றி பெற்ற நிலையில் சீன வீராங்கனையுடன் நடைபெறும் அரை இறுதியில் வெற்றி பெற்று உலக பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி சுற்றுக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார் என நம்பப்படுகிறது.

Next Story