உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை பூஜா காட்கர் வெண்கலம் வென்றார்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை பூஜா காட்கர் வெண்கலம் வென்றார்
x
தினத்தந்தி 24 Feb 2017 11:00 PM GMT (Updated: 24 Feb 2017 7:57 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில்

புதுடெல்லி,

 இந்திய வீராங்கனை பூஜா காட்கர் 228.8 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் சீன வீராங்கனை மெங்யா ஷி 252.1 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு சீன வீராங்கனை டோங் லிஜி 248.9 புள்ளியுடன் வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். 28 வயதான பூஜா காட்கர் 2014–ம் ஆண்டு ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தீபக் குமார் 5–வது இடம் பெற்றார். பெண்களுக்கான டிராப் அணிகள் பிரிவில் ராஜேஸ்வரி குமாரி, சீமா தோமர், மனிஷா கெர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தகுதி சுற்றுடன் வெளியேறியது.


Next Story