துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 3 March 2017 7:52 PM GMT (Updated: 3 March 2017 7:52 PM GMT)

ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் தனக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விதித்த ஆயுட்கால தடையை நீக்க உத்தரவிட வேண்டும்

* ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் தனக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விதித்த ஆயுட்கால தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும், ஸ்காட்லாந்தில் நடைபெறும் கிளப் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.வி. ஆஷா, இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

* உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் அன்காட் வீர்சிங் பாஜ்வா (இந்தியா)-ஹாலே டுன்(அமெரிக்கா) ஜோடி 28-26 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவின் ராபர்ட் ஜான்சன்-கெய்ட்லின் கோனோர் இணையை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது.

* சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி.அலுவலக அணி 2-1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்துஸ்தான் ஈகிள்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை எப்.சி. அணியை சாய்த்தது.

* தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

* இந்தியாவுக்கு வந்துள்ள பெலாரஸ் பெண்கள் ஆக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. போபாலில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பெலாரசை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

Next Story