சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் தரவரிசை: 2-வது இடத்தில் சிந்து


சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் தரவரிசை: 2-வது இடத்தில் சிந்து
x
தினத்தந்தி 6 April 2017 9:00 PM GMT (Updated: 6 April 2017 7:17 PM GMT)

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

புதுடெல்லி, 

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பெண்கள் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 5-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றதன் மூலம் சிந்துவுக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. அவரது சிறந்த தரவரிசை இதுவாகும். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஒரு இடம் பின்தங்கி 9-வது இடத்தை பெற்றுள்ளார். தாய் சூ யிங் (சீனத்தைபே) முதலிடத்திலும், ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்) 3-வது இடத்திலும் உள்ளனர்.

ஆண்கள் பிரிவில் இந்தியர்களில் அதிகபட்சமாக அஜய் ஜெயராம் 20-வது இடத்தையும், பிரனாய் 26-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

Next Story