சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கால்இறுதியில் சிந்து தோல்வி


சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கால்இறுதியில் சிந்து தோல்வி
x
தினத்தந்தி 14 April 2017 8:16 PM GMT (Updated: 14 April 2017 8:15 PM GMT)

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 11-21, 15-21 என்ற நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினிடம் (ஸ்பெயின்) பணிந்தார். இதன் மூலம் சமீபத்தில் இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் சிந்துவிடம் அடைந்த தோல்விக்கு கரோலினா பழிதீர்த்துக் கொண்டார்.

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டங்களில் சாய் பிரனீத் (இந்தியா) 15-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் தனோங்சாக்கையும் (தாய்லாந்து), ஸ்ரீகாந்த் (இந்தியா) 21-14, 21-16 என்ற நேர் செட்டில் ஷி யுய்யையும் (சீனா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர். 

Next Story