‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து: போலீஸ் அணி வெற்றி


‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து: போலீஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 25 Jun 2017 7:21 PM GMT (Updated: 25 Jun 2017 7:21 PM GMT)

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 2–வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை சிட்டி போலீஸ் அணி 25–14, 25–20 என்ற நேர் செட்டில் மதுரா வாலி அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி 25–23, 25–10 என்ற நேர் செட்டில் நெல்லை பிரண்ட்சை வென்றது. அக்னி பிரண்ட்ஸ், என்.வி.சி, அணிகளும் வெற்றி கண்டன. பெண்கள் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.


Next Story