துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 14 Aug 2017 10:15 PM GMT (Updated: 14 Aug 2017 8:46 PM GMT)

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வலுவான நெதர்லாந்தை வீழ்த்தியது.

* இந்திய ஆண்கள் ஆக்கி அணி, நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வலுவான நெதர்லாந்தை வீழ்த்தியது.

* இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் பல்லகெலேவில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘நாங்கள் சுமார் 25 வீரர்களை அடையாளம் கண்டு வைத்து இருக்கிறோம். அவர்களுக்கு அடுத்த 5 மாதங்களில் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும். அவர்களின் செயல்பாடுகளை கவனித்து 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி இறுதி செய்யப்படும். நமது அணி வீரர்கள் உடல் தகுதியில் முன்னேற்றம் காண வேண்டும். யுவராஜ்சிங்குக்கு ஓய்வு தான் கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவில்லை. சுரேஷ்ரெய்னா உள்பட எல்லாரும் வாய்ப்பில் தான் இருக்கிறார்கள். அணி தேர்வின் போது எல்லா வீரர்களின் அம்சங்களையும் ஆராய்ந்து சிறந்த அணியை தேர்வு செய்து வருகிறோம். இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும். டோனி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் சிறப்பாக செயல்படாவிட்டால் மாற்று வீரர் குறித்து நாங்கள் பார்ப்போம்’ என்று தெரிவித்தார்.

* ரோஜர்ஸ் கோப்பை சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரே 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 3-ம் நிலை வீரர் ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக சுற்று ‘பிளே-ஆப்’ ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் கனடாவில் உள்ள எட்மன்டனில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. யுகி பாம்ப்ரி, சகெத் மைனெனி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். மகேஷ்பூபதி தலைமையிலான இந்திய அணியில் ராம்குமார் ராமநாதன், ரோகன் போபண்ணா ஆகியோரும் இடம் பிடித்து இருக்கிறார்கள். மாற்று வீரர்களாக பிராஜ்னேஷ் குணேஸ்வரன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்த 44 வயதான லியாண்டர் பெயஸ் களம் இறக்கப்படவில்லை. இதனால் அவர் பாதியில் போட்டியில் இருந்து வெளியேறினார். கேப்டன் மகேஷ்பூபதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

Next Story