அகில இந்திய கபடி இறுதிப்போட்டியில் தமிழக அணி


அகில இந்திய கபடி இறுதிப்போட்டியில் தமிழக அணி
x
தினத்தந்தி 14 Sep 2017 9:02 PM GMT (Updated: 14 Sep 2017 9:02 PM GMT)

தபால் துறையினருக்கான 31–வது அகில இந்திய கபடி போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சென்னை,

தபால் துறையினருக்கான 31–வது அகில இந்திய கபடி போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடகா அணி 37–33 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரைஇறுதியில் தமிழக அணி 29–7 என்ற புள்ளி கணக்கில் ஆந்திராவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு–கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story