துளிகள்

*அடுத்த மாதம் தொடங்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணிக்கு மெயில்சன் ஆல்வ்ஸ் (பிரேசில்) ஹென்ரிக் செரினோ (போர்ச்சுகல்) ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
*2020–ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ள டென்னிஸ் வீரர்களின் முதற்கட்ட பட்டியலில் இருந்து மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், சகெத் மைனெனி ஆகியோரை மத்திய விளையாட்டு அமைச்சகம் கழற்றிவிட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை இனி கிடைக்காது. அதே சமயம் யுகி பாம்ப்ரி, ராம்குமார், ரோகன் போபண்ணா, சுமித் நாகல், சானியா மிர்சா, பிரார்த்தனா தோம்ப்ரே, கவுர் தாண்டி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் போட்டிக்கு தயாராவதற்காக மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகையை பெறுவார்கள்.
*அடுத்த மாதம் தொடங்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணிக்கு மெயில்சன் ஆல்வ்ஸ் (பிரேசில்) ஹென்ரிக் செரினோ (போர்ச்சுகல்) ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
*கனடாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய டேவிஸ் டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சகெத் மைனெனி முழு உடல்தகுதியுடன் இல்லாததால் நீக்கப்பட்டுள்ளார்.