சென்னை மாவட்ட ஜூனியர் கபடி போட்டி நாளை நடக்கிறது

44–வது மாநில ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி சங்ககிரியில் வருகிற 28–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை,
44–வது மாநில ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி சங்ககிரியில் வருகிற 28–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட அணியை தேர்வு செய்வதற்கான மாவட்ட ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஜவகர் நகர் 2–வது மெயின்ரோட்டில் உள்ள ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் 27–12–1997–ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம். அதேநேரத்தில் உடல் எடை 70 கிலோவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தகுந்த அசல் வயது சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் வர வேண்டும். இந்த தகவலை சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கோல்டு எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story