பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார், ஸ்ரீகாந்த் சிந்து தோல்வி


பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார், ஸ்ரீகாந்த் சிந்து தோல்வி
x
தினத்தந்தி 28 Oct 2017 8:53 PM GMT (Updated: 2017-10-29T02:23:28+05:30)

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில்

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14–21, 21–19, 21–18 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் பிரனாயை போராடி வீழ்த்தினார். ஸ்ரீகாந்த், இறுதிஆட்டத்தில் தகுதி நிலை வீரர் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டாவை இன்று எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து 14–21, 9–21 என்ற நேர் செட்டில் அகானே யமாகுச்சியிடம் (ஜப்பான்) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.


Next Story