தேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா, சிந்து


தேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா, சிந்து
x
தினத்தந்தி 7 Nov 2017 9:15 PM GMT (Updated: 7 Nov 2017 8:49 PM GMT)

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.

நாக்பூர்,

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21–11, 21–10 என்ற நேர் செட்டில் அனுரா பிரபுதேசாயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து, ருத்விகா காதேவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை பறிகொடுத்து அதிர்ச்சிக்குள்ளான சிந்து அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு சரிவில் இருந்து மீண்டார். முடிவில் சிந்து 17–21, 21–15, 21–11 என்ற நேர் செட்டில் ருத்விகாவை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதி ஆட்டத்தில் சாய்னாவும், சிந்துவும் இன்று நேருக்கு நேர் கோதாவில் இறங்குகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையரில் முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21–16, 21–18 என்ற நேர் செட்டில் லக்‌ஷயா சென்–ஐ தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் எச்.எஸ்.பிரனாய் 21–14, 21–17 என்ற நேர் செட்டில் சுபாங்கர் தேவை வெளியேற்றினார்.


Next Story