சீன ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து வெற்றி


சீன ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து வெற்றி
x
தினத்தந்தி 15 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-16T01:56:48+05:30)

சாய்னா, சிந்து வெற்றி: சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்று புஜோவ் நகரில் நேற்று தொடங்கியது.

புஜோவ்,

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்று புஜோவ் நகரில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொண்டார். இதில் அபாரமாக ஆடிய சாய்னா 21-12, 21-13 என்ற நேர்செட்டில் பெய்வென் ஜாங்கை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். சாய்னா அடுத்து அகானே யமாகுச்சியை (ஜப்பான்) சந்திக்கிறார். மற்றொரு முதல் சுற்றில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து 24-22, 23-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் சயாகா சாட்டோவை வீழ்த்தினார்.

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய் 18-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் 1 மணி நேரம் 29 நிமிடங்கள் போராடி தென்கொரியாவின் லீ டோங் கீனை வென்றார்.

Next Story