சீன ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, சாய்னா வெளியேற்றம்


சீன ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, சாய்னா வெளியேற்றம்
x
தினத்தந்தி 16 Nov 2017 10:45 PM GMT (Updated: 16 Nov 2017 8:11 PM GMT)

சீன ஓபன் பேட்மிண்டன் நடந்த போட்டியில் சாய்னா வெளியேற்றம், சிந்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.

புஜோவ்,

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹான் யுவை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் 18-21, 11-21 என்ற நேர்செட்டில் அகானே யமாகுச்சியிடம் (ஜப்பான்) தோற்று வெளியேறினார். இதே போல் ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் பிரனாய் 19-21, 17-21 என்ற நேர்செட்டில் லீ செயுக் யுவிடம் (ஹாங்காங்) தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.

Next Story