மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி


மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி
x
தினத்தந்தி 17 Nov 2017 10:00 PM GMT (Updated: 17 Nov 2017 6:44 PM GMT)

மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடக்கிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் தமிழ்நாடு கைப்பந்து சங்கம் அனுமதியுடன் 67-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி (இருபாலருக்கும்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் எல்லா அணிகளும் வருகிற 27-ந் தேதிக்குள், பொதுச்செயலாளர், தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கம், 46/101 கெங்கு ரெட்டி தெரு, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரியிலோ அல்லது tamilnadustatevolleyball@gmail.com என்ற இ-மெயில் மூலமோ தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story