உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி


உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 21 Nov 2017 9:00 PM GMT (Updated: 21 Nov 2017 7:56 PM GMT)

5–வது உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது.

கவுகாத்தி,

5–வது உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி 5–0 என்ற புள்ளி கணக்கில் அனஸ்டசியா லிசின்ஸ்காவை (உக்ரைன்) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஷாஷி சோப்ரா (57 கிலோ), சீனத்தைபேயின் லின் லி வெய்–யியை எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் எச்சரிக்கை பாணியை கையாண்ட ஷாஷி அதன் பிறகு தாக்குதலை தொடுத்ததுடன் 5–0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். இதே போல் 64 கிலோ உடல் எடைப்பிரிவில் உள்ளூர் மங்கை அன்குஷிதா போரோ 5–0 என்ற புள்ளி கணக்கில் துருக்கியின் அலுக் கக்லாவை சாய்த்து கால்இறுதியை எட்டினார். 48 கிலோ பிரிவில் இந்தியாவின் நீதுவும் கால்இறுதியை உறுதி செய்தார்.


Next Story